'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்

புவனகிரி :கீரப்பாளையம் ஒன்றியம், விளாகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

மத்திய தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபிதா ரவி வரவேற்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். 15 துறை அதிகாரிகள், 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

தொழில் நுட்ப பிரிவு உதயசூரியன், ஜானகிராமன், பூவராகமூர்த்தி, பாபாஷ், சக்திவேல், மன்சூர், கண்ணன், ரமேஷ், ராமமூர்த்தி, கிருஷ்ணன், ரகுஞானசேகர், சுந்தரவேல், அன்பரசன், காண்டீபன், சேகர், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுகாதார செவிலியர் ரம்யாதேவி நன்றி கூறினார்.

Advertisement