ரூ. 3 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

மந்தாரக்குப்பம் :"மந்தாரக்குப்பம் அருகே வீடு புகுந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மந்தாரக்குப்பம் அடுத்த முதனை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி வனிதா, 41; என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார்.

இவர் கடந்த 21ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது.

வீட்டிற்குள் உள்ளே சென்ற பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு ஐந்தரை சவரன் நகைகள் மற்றும் வெள்ளி விளக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.

புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement