அமெரிக்க வரி விதிப்பு விவகாரம் ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை 

திருப்பூர் : நம் நாட்டின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால், ஜவுளி தொழில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

நம் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி தொழிலில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு குறித்து பல தரப்பட்ட கருத்துகள் நிலவிவரும் நிலையில், அமெரிக்க ஏற்றுமதியை சார்ந்துள்ள இந்திய ஜவுளி தொழிலிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று தெரிகிறது.

இதில் உள்ள பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஏற்றுமதியாளர் தரப்பிலான ஆலோசனைகள் ஆகியன குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.

விளக்க ம் பொதுச் செயலாளர் திருக்குமரன் பேசுகையில், 'அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர், தமிழக முதல்வர் உள்ளிட்டோரிடம் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்' என்றார்.

மூன்று வகை ஏற்றுமதி இணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், 'அமெரிக்காவுடனான திருப்பூரின் ஏற்றுமதி மூன்று வகையானது. ஆண்டு முழுமைக்குமான வர்த்தகம், சீசன் வர்த்தகம் மற்றும் பிராண்டட் வர்த்தகர்களுடனான நேரடி வர்த்தகம். இதில் கூடுதல் வரி காரணமாக ஏற்படும் பிரச்னைகள் குறி த்து விரிவாக ஆலோசனை நடத்தி, உரிய தீர்வுக்கு வழி காண வேண்டும்' என்றார்.

அபராதம் கூடாது சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஏற்றுமதியாளர் வங்கி கடன்களில் அவசர கடன் உத்தரவாத திட்டத்தில் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். ரேட்டிங் ஏஜன்சிகள் ஆய்வின் போது, மதிப்பு குறைத்து அறிவிக்கக் கூடாது. தொகை வருவது தாமதமானால், அபராதம் விதிக்க கூடாது. இது குறித்து வங்கிகளுக்கும் ரேட்டிங் ஏஜன்சிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்'' என்றார்.

''அதிக வரி விதிக்கும் போது, அனுப்பும் சரக்குகளுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி; கையில் உள்ள ஆர்டர்களை நிறுத்தி வைப்பது; ஆர்டர்கள் ரத்து போன்றவை உள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இது போன்ற சிக்கல்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஆலோசித்து தெரிவிக்க வேண்டும்'' என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

துணைக்குழு தலைவர் சிவசுப்ரமணியம் நன்றி கூறினார்.சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து ெகாண்டனர்.

Advertisement