சாலை பணிக்கு பூமி பூஜை

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் புதிய சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது.

பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தி.மு.க., நிர்வாகிகள் பழனி, ஆசைத்தம்பி, வடிவேல், பழனிவேல், சிவராமன், சண்முகம், சிகாமணி உடனிருந்தனர்.

Advertisement