தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயினார்

3

திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



அவர் திருச்சியில் அளித்த பேட்டி;


தமிழகத்தில் தினசரி எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள், கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்தாண்டை விட 59 சதவீதம் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. 125 சதவீதம் சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்து வருகிறது.


ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது மதுபோதையிலே வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை, சொத்து வரி அதிகம் விதிப்பு, மின் கட்டண உயர்வு அதைவிட அதிகம். எப்போது தேர்தல் வந்தாலும் இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்படக் கூடிய அரசாங்கமாக தான் இருக்கிறது.


ஜக்தீப் தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் சுதந்திரமாக தான் உள்ளார். ஆனால் இப்படி ஒரு வதந்தியை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். தமிழகத்தில் இப்படி ஒரு வதந்தியை பரப்புகின்றனர்.


எங்களின் கூட்டணிக் கட்சித் தலைவர் இபிஎஸ். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான். இனி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்வார்.


யாரும் ரொம்ப குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி. இப்போது இருக்கும் ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய ஆட்சி. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர். மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். பலமான கூட்டணி தான் ஜெயிப்பார்கள் என்று கிடையாது.


நிச்சயமாக தமிழகத்தில் மிக பெரிய ஆட்சி மாற்றம் வரும். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். காங்கிரசுடன் விஜய் கூட்டணி வைப்பாரா என்று அவர்(விஜய்) தான் சொல்ல வேண்டும்.


திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு, எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடிக்கிறவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.


இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

Advertisement