சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

சென்னை: எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்தார்.
செப்.9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. தேஜ கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டு உள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளராக ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இருகூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந் நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வந்தார். புதுடில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் ஆ. ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் வரவேற்றனர். காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.
சென்னை வந்துள்ள அவர், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.









