2 நாள் பயணமாக குஜராத் செல்கிறார் மோடி; ரூ.5,400 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

1

புதுடில்லி: ஆகஸ்ட் 25, 26ல் ஆமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அர்ப்பணிக்க உள்ளார்.


ஆகஸ்ட் 25, 26ம் தேதிகளில் குஜராத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆகஸ்ட் 25ம் தேதி மாலை 6 மணியளவில் ஆமதாபாத்தில் உள்ள கோடல்தாம் மைதானத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். அவர் பொது நிகழ்ச்சியிலும் உரையாற்றுகிறார்.


ஆகஸ்ட் 26ம் தேதி காலை 10:30 மணியளவில், ஆமதாபாத்தின் ஹன்சல்பூரில், பிரதமர் மோடி
100 நாடுகளுக்கு பேட்டரி மின்சார வாகன ஏற்றுமதியைத் துவக்கி வைப்பார். இது பசுமை எரிசக்தி துறையில் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதற்கான ஒரு மைல்கல் ஆகும். இந்த நிகழ்வில் அவர் உரையாற்ற உள்ளார்.


அவர், ரூ.1,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல ரயில் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணிப்பார். அவர் நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்த முக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Advertisement