ரஷ்யாவை கட்டாயப்படுத்த தீவிர பொருளாதார நெருக்கடி: இந்தியா மீது வரி விதிப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் கருத்து

10


வாஷிங்டன்: ''உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், அதிபர் டிரம்ப் தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளார்'' என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்து உள்ளார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்,

வரி மற்றும் அபராத வரி விதித்துள்ளார். இது உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச வரி விதிப்பாகும். இதற்கு அமெரிக்க தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கருத்துகளையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது இரண்டாம் கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார். இது தீவிர பொருளாதார நெருக்கடி ஆகும். ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும்.




@quote@உக்ரைனில் தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால், ரஷ்யாவை உலக பொருளாதாரத்தில் மீண்டும் புத்துயிர் பெற செய்ய முடியும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த முயன்றார். quote


கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த சில வாரங்களில், இரு தரப்பிலிருந்தும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜே.டி.வான்ஸ் கூறினார்.

Advertisement