பாலியல் புகார் எதிரொலி; பாலக்காடு காங் எம்எல்ஏ ராகுல் சஸ்பெண்ட்

12


திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 25) கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டத்தில், இவர் 'வாட்ஸாப்' செயலி வாயிலாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், தனியாக ஹோட்டலுக்கு வரும்படி அழைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் மலையாள திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.


ஆனால், ராகுல் பெயரை அவர் வெளிப்படையாக கூறவில்லை. அது ராகுல் தான் என, கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை தொடர்ந்து, மேலும் பல பெண்கள் ராகுலுக்கு எதிராக புகார் கூறினர். இந்த அழுத்தம் காரண மாக, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார்.


'ஆனால், அவர் எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்' என, பா.ஜ., கம்யூ., கட்சிகள் அறிவித்து உள்ளன. இந்நிலையில், ராகுல் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 25) கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement