நீர்வளத்தை குன்ற செய்யும் அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: 'தென்பெண்ணை துவங்கி தாமிரபரணி வரை, ஆறுகளை மாசுபடுத்துவது தான், தமிழகத்தின் பொற்கால ஆட்சியா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தொழிற்சாலைகளின் கழிவுநீரை, தென் பெண்ணையாற்றில் கலந்து விடுவதால், துர்நாற்றத்துடன் நுரை பொங்கி, கரையில் ஒதுங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணாடி போல, தண்ணீர் தளும்பிச் செல்ல வேண்டிய தமிழக ஆறுகளும், ஏரிகளும், தி.மு.க., அரசின் அலட்சியத்தால், கழிவு நீர் கால்வாய்களாக மாறி விட்டன.
தென் பெண்ணை ஆற்றின் அவல நிலையை, தி.மு.க., அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச் சென்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட்ட பிறகும், அதை கண்டு கொள்ளாமல், தி.மு.க., அரசு மாசுபடுத்துகிறது. எதிர்கால தலைமுறையின், குடிநீர் தேவையை தீர்க்க கூட, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தமிழகத்தில் நீர்நிலைகள் இருக்காது. தென்பெண்ணை துவங்கி தாமிரபரணி வரை, அனைத்து ஆறுகளையும் மாசுபடுத்தி, நீர்வளத்தை குன்ற செய்யும் தி.மு.க., ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலமா. வெட்கக்கேடு. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடணும்: இஸ்ரேல் நிபந்தனை!
-
கட்சிப் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது; மனிதநேய மக்கள் கட்சி உள்பட 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்
-
கிட்னி விற்பனை; ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது ஐகோர்ட் கிளை
-
ஆசிய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் நீரு தண்டா
-
பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கு : சான்றிதழ் வெளியிட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு
-
தமிழகம் வந்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!