உத்தரபிரதேசத்தில் சோகம்; லாரி- டிராக்டர் மோதியதில் 8 பேர் பலி; 45 பேர் காயம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் லாரி- டிராக்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி- டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகவேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது மோதி உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த விபத்து இரவு 2.15 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


மேலும்
-
பாலியல் புகார் எதிரொலி; பாலக்காடு காங் எம்எல்ஏ ராகுல் சஸ்பெண்ட்
-
டில்லிக்கு மஞ்சள் அலர்ட்: விமான நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
-
நீர்வளத்தை குன்ற செய்யும் அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள்: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
-
உடல்நலக் காரணங்களுக்காகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா; வேறு காரணமில்லை என்கிறார் அமித்ஷா
-
தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்