துப்பாக்கிசுடுதல்: இந்தியா அசத்தல்

ஷிம்கென்ட்: கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடந்தது. ஜூனியர் பெண்களுக்கான 'டிராப்' பிரிவில் போட்டி நடந்தன. அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா, ஆஷிமா, பிரீத்தி களமிறங்கினர். ஒட்டுமொத்தம் 319 புள்ளி எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர். சீனா, குவைத் அடுத்த இரு இடம் பிடித்தன.
அடுத்து தனிநபர் பிரிவு போட்டி நடந்தன. இதில் துவக்கத்தில் இருந்து இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். முடிவில் 43 புள்ளி எடுத்த நீரு, தங்கப்பதக்கம் வென்றார். கத்தாரின் பாசில் ரே (37) வெள்ளி வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷிமா (29) வெண்கலம் கைப்பற்றினார்.
25 மீ., ஜூனியர் 'பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் பயல் காத்ரி (36), நாம்யா கபூர் (30), தேஜஸ்வினி (27) என மூவரும் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
யூத் பிரிவில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் வென்றது.
மனுபாகர் 'நான்கு'
பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனுபாகர், ஈஷா, சிம்ரன்பிரீத் கவுர் கூட்டணி, 1749 புள்ளியுடன் வெண்கலம் வென்றது. தனிநபர் பிரிவில் மனுபாகர், 25 புள்ளி எடுத்து நான்காவது இடம் பிடித்தார். ஈஷாவுக்கு (18) ஆறாவது இடம் கிடைத்தது.

Advertisement