அணில் ஏன் அங்கிள்... அங்கிள் என்று கத்துகிறது: விஜயை விமர்சித்த சீமான்

17


சென்னை: அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. போன மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.


மதுரையில் சீமான் கூறியதாவது: அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும். போனா மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார்.

அதிமுக யாரிடம் இருக்கிறது என்பதை நான்கரை ஆண்டுகள் அவர் முதல்வராக இருந்தபோது ஏன் கேட்கவில்லை?

நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் லஞ்சமும் ஒரு நிமிடத்தில் ஒழியும். பதவி கோடி, கோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை.



பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறேன். அப்போது கூட்டத்தை பாருங்கள். மாநாடு எப்படி நடத்த வேண்டும், மாநாட்டில் எப்படி உரையாற்ற வேண்டும். எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை திருச்சி மாநாட்டில் வந்து பாருங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

நிருபர்: எல்லோருக்கும் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லா இருக்கும் என்று மனநிலை இருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் அந்த நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

2016ல் ஜெயலலிதா கூட்டணிக்கு...




சீமான் பதில்: அது நான் வரும் போது சொல்கிறேன். நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். தனித்து தான் போட்டியிடுவேன். தனித்த பெருத்த முதன்மையான அதிகாரத்தை நோக்கி தான் நான் ஓடுகிறேன். அப்படினா 2016ல் நான் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கூப்பிடும் போதே போய் இருப்பேன்.

நிரந்தர வெற்றியை…!



அதன் பிறகு அதிமுக, பாஜ எத்தனையோ தடவை வலியுறுத்தி கூப்பிட்டு, நான் அப்பொழுது போகவில்லை. எனக்கு ஒன்று நோக்கம் இருக்கிறது. தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை நான் இழக்க தயாராக இல்லை.

கூட்டணி



நாங்கள் வீழ்ந்தாலும் சரி, எங்கள் இனம் வாழ்ந்தால் போதும், இது எங்கள் தத்துவம். நான் தோற்றே போய்விட்டேன். நான் சட்டசபைக்கு போகவில்லை என்று என்னை யாராவது சட்டையை பிடித்து அடிக்கிறீர்களா? நான் கூட்டணி என்று வைத்தேன் என்றால், நான் மட்டும் தான் நிற்க வேண்டும். கூட்டணி வைத்து வென்று போனவர்கள் செய்தது என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.



நிருபர்: விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் என்று சொல்கிறாரே?
சீமான் பதில்: தேர்தல் நெருங்குகிறது என்று அர்த்தம். விநாயகர் நம்ம ஆளுதானே வாழ்த்திட்டு போக வேண்டியது தானே? அதில் ஒன்றும் இல்லையே? தமிழனோட ஆட்சி காலத்தில் அவர் தான் தெய்வமாக இருந்தார்.

Advertisement