கூகுள் மேப்பால் வந்த வினை; ஆற்றில் வேன் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
கூகுள் மேப் காட்டும் வழியை நம்பி ஏராளமானோர் தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. அந்தவகையில், ராஜஸ்தானில் கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றி 9 பேரை ஏற்றி சென்ற வேன் பனாஸ் ஆற்றில் கவிழந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சித்தோர்கரில் உள்ள கனகேடா கிராமத்தில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர், பில்வாராவில் உள்ள சவாய் போஜ் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: கூகுள் மேப் காட்டிய வழிதடத்தில் சென்று ஒரு குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் மேப்பில் அது 'அப்டேட்' செய்யப்படவில்லை. இதனால் தான் வேனில் சென்றவர்கள், கூகுள் மேப் பாதையில் சென்று ஆற்றில் விழுந்துள்ளனர்.
இதுவரை, மூன்று பெண்கள் மற்றும் நான்கு வயது சிறுமியின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, தேடுதல் பணி இன்னும் நடந்து வருகிறது. இந்த விபத்து அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்துள்ளது.
அதிகாலை பயணத்தால் விபரீதம்!
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும்.
@block_P@
கூகுள் மேப் காட்டிய தவறான வழிகாட்டுதல்கள் காரணமாக விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க என்ன செய்யலாம்? இது தொடர்பாக உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே!block_P










மேலும்
-
தினம் தினம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே கேள்வி; இன்றும் அதிமுக பக்கம் தான் திருமாவின் பார்வை!
-
சிறுவன் தற்கொலைக்கு உதவியது சாட்ஜிபிடி: அமெரிக்க பெற்றோர் குற்றச்சாட்டு!
-
இந்தியா - அமெரிக்கா பேச்சு தொடக்கம்; விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு
-
சத்தீஸ்கர் - மஹாராஷ்டிரா எல்லையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
-
வரதட்சணை கொடுமையால் 2022ல் மட்டும் 6 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பு!
-
வாரிசு அரசியல்: முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்!