7574 ரன்... 502 விக்கெட் * சாகிப் அல் ஹசன் சாதனை

நார்த் சவுண்டு: 'டி-20' அரங்கில் 7000 ரன், 500 விக்கெட் சாய்த்த முதல் 'ஆல் ரவுண்டர்' ஆனார் சாகிப் அல் ஹசன்.
வெஸ்ட் இண்டீசின் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. நார்த் சவுண்டில் நடந்த போட்டியில் செயின்ட் கிட்ஸ் (133/9) அணியை, ஆன்டிகுவா (137/3) அணி 7 விக்கெட்டில் வென்றது.
ஆன்டிகுவா அணி வீரர், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், 3 விக்கெட் சாய்த்தார். இதில் முகமது ரிஸ்வானை அவுட்டாக்கிய போது, 'டி-20' அரங்கில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 457 போட்டியில் 502 விக்கெட் (7574 ரன்) சாய்த்துள்ளார்.
இந்த இலக்கை அடைந்த முதல் வங்கதேசம், ஒட்டுமொத்தமாக 5வது பவுலர் ஆனார். முதல் நான்கு இடத்தில் ரஷித் கான் (660, ஆப்கன்), பிராவோ (631, வெ.இண்டீஸ்), சுனில் நரைன் (590, வெ.இண்டீஸ்), இம்ரான் தாகிர் (554, தெ.ஆப்.,) உள்ளனர்.
முதல் 'ஆல் ரவுண்டர்'
'டி-20' அரங்கில் 7000 ரன், 500 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்த முதல் 'ஆல் ரவுண்டர்' என சாதனை படைத்தார். அடுத்த இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் பிராவோ (6970 ரன், 631 விக்.,), ஆன்ட்ரி ரசல் (9361 ரன், 487 விக்.,) உள்ளனர்.

Advertisement