குகேஷ், பிரக்ஞானந்தா 'டிரா'

செயின்ட் லுாயிஸ்: அமெரிக்காவில் சின்க்யுபீல்டு கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆறாவது சுற்று நேற்று நடந்தன. இந்தியாவின் பிரக்ஞானந்தா, போலந்தின் ஜான் டுடாவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 32 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
மற்றொரு போட்டியில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரான்சின் அலிரேசா மோதினர். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். பெரும்பாலான நேரத்தில் பின்தங்கி இருந்த குகேஷ், 78 வது நகர்த்தல் வரை போராடி 'டிரா' செய்தார். மற்ற வீரர்கள் மோதிய ஆறாவது சுற்று போட்டிகள் அனைத்தும் 'டிரா' ஆகின.
ஆறு சுற்று முடிவில் அமெரிக்காவின் பேபியானோ, 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அமெரிக்காவின் ஆரோனியன் (3.5), பிரக்ஞானந்தா (3.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். குகேஷ் (3.0) 8வது இடத்தில் தொடர்கிறார்.

Advertisement