'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்
சென்னை: 'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், 12 சதவீத வரியில் உள்ள பொருட்களை, 18 சதவீதத்திற்கு உயர்த்தக்கூடாது' என்பதை வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
தற்போது பூஜ்ஜியம் முதல் 12 சதவீதத்தில் உள்ள பல்வேறு உணவுப் பொருட்களை, 5 சதவீதத்துக்கு மாற்றி அமைத்தால், பல பிரச்னைகள் தீரும்.
பிஸ்கட்டுக்கு 18 சதவீதமாக உள்ள வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தற்போது, 12 சதவீத வரியில் உள்ள எந்த பொருட்களும், 18 சதவீதத்திற்கு சென்று விடக்கூடாது.
இதனால், வரி ஏய்ப்பு குறைந்து, வரி செலுத்துவோர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வரும் கவுன்சில் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் அனிஷ் வெள்ளி வென்றார்
-
வரிவிதிப்பு விவகாரத்தால் அமெரிக்காவுக்கு குட்பை; 40 நாடுகளுடன் இந்தியா பேச்சு
-
ஹூண்டாய் காரில் கோளாறு: விளம்பரப்படுத்திய ஷாருக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு
-
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நம்பிக்கையுடன் சொல்கிறார் அன்புமணி
-
விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
-
பீஹாரில் இண்டி கூட்டணி வெற்றியை தடுக்கும் பாஜ: ஸ்டாலின் குற்றச்சாட்டு