திருவள்ளூரில் 'டேட்டா சென்டர் பார்க்' : தமிழக அரசு அமைக்கிறது

சென்னை:
'டேட்டா சென்டர்' துறை வேகமாக வளர்ச்சி கண்டு வருவதை அடுத்து, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது திருவள்ளூரில் தனி தொழில் பூங்கா ஒன்றை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை தங்களின் தகவல் தொகுப்புகளை, 'டேட்டா சென்டர்' நிறுவனங்கள் வாயிலாக பாதுகாக்கின்றன.
இத்தகைய தரவு மையத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இம்மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகாவில், 650 ஏக்கரில் கனரக இன்ஜினியரிங் தொழில் பூங்கா அமைக் கப்பட உள்ளது; அதிலேயே டேட்டா சென்டரையும் அமைக்க முடியுமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் அனிஷ் வெள்ளி வென்றார்
-
வரிவிதிப்பு விவகாரத்தால் அமெரிக்காவுக்கு குட்பை; 40 நாடுகளுடன் இந்தியா பேச்சு
-
ஹூண்டாய் காரில் கோளாறு: விளம்பரப்படுத்திய ஷாருக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு
-
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நம்பிக்கையுடன் சொல்கிறார் அன்புமணி
-
விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
-
பீஹாரில் இண்டி கூட்டணி வெற்றியை தடுக்கும் பாஜ: ஸ்டாலின் குற்றச்சாட்டு