எதையும் தாங்குவார் மோடி: பிஜி நாட்டின் பிரதமர் புகழாரம்

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்த நிலையில், ''பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்,'' என, பிஜி பிரதமர் சிட்டிவேனி லிகாமமடா ரபுகா புகழ்ந்துள்ளார்.
தென் பசிபிக் நாடான பிஜி, சுற்றுலாவுக்கு புகழ் பெற்றது. இந்நாட்டின் பிரதமராக பதவியேற்ற சிட்டிவேனி லிகாமமடா ரபுகா, முதல் முறையாக டில்லி வந்தார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக வந்த ரபுகா, பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
அப்போது, இருநாடுகளுக்கும் இடையே கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, ராணுவம், வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ரபுகா பேசியதாவது:
அமெரிக்கா உடனான, இந்தியாவின் நட்புறவு பாதிக்கும் வகையிலான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு வந்தபோது, அதற்கு அடுத்த நாளே, 'யாரோ ஒருவர் உங்களுடன் மனக்கசப்பு கொண்டிருக்கிறார்' என, கூறியிருந்தேன். ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகும் மனிதர் அல்ல அவர்; எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இதுவரை நான் தனிப்பட்ட முறையில் பேசியது இல்லை. இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் கேட்டிருந்தேன். அதே போல், பிரிட்டன் பிரதமரிடம் கேட்டிருந்தேன்.
பிரதமர் மோடி எங்கள் நாட்டின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார். அவரிடம் பேசும்போது இதை நான் நேரடியாகவே உணர்ந்தேன். இதன் காரணமாக, பிஜியின் முக்கியமான நட்பு நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி
-
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!
-
காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமிக்க முடிவு
-
சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு வரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை