காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

1


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீர் பந்திபோராவில்
எல்லைப்பகுதியில், இன்று பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயன்றதை
பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.



இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் மேலும் பங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


அந்த நபர்கள் யார்? எதற்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற இருக்கிறது. விசாரணை முடிவில்தான் அவர்கள் ஏன் ஊடுருவ முயன்றார்கள் என்பது தெரியவரும்.

Advertisement