சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த இதுவரையிலான மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பிஜாப்பூரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண் அடைந்தனர்.
இது குறித்து சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியதாவது: பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் 30 பேர் சரண் அடைந்தனர். சரண் அடை ந்தவர்களில் இதுவரையிலான மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.
சத்தீஸ்கர் அரசின் மறுவாழ்வு கொள்கை, வீரர்களின் துணிச்சல் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இது அமைந்துள்ளது. நக்சலைட்டுகள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஆகஸ்ட் 17ம் தேதி காரியாபந்த் பகுதியில் நக்சலைட்டுகள் 4 பேர் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி
-
செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்