இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி

சென்னை: இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. முதல் முறையாக, 80 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. ஆனாலும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 423 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த மாதம், 7ம் தேதி துவங்கியது.
சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 90,624 பி.இ., - பி.டெக்., இடங்களில், ஒரு லட்சத்து, 45,481 இடங்கள் நிரம்பின.
அதன் பின், இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங், கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், 7,964 மாணவ - மாணவியருக்கு, பி.இ., - பி.டெக்., இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன.
இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கான கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதில், 729 மாணவ - மாணவியருக்கு, இன்ஜினியரிங் 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழிற்கல்வியில், நான்கு பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இதன் வாயிலாக, இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 90,624 இடங்களில், ஒரு லட்சத்து 54,178 இடங்கள் நிரம்பியுள்ளன. முதல் முறையாக, 80 சதவீத சீட்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 18 'சீட்'கள், நிரம்பாமல் காலியாக உள்ளன. இவற்றை ஏற்கனவே உள்ள, 'உயர்வுக்கு படி' திட்டத்தின் வழியே, நிரப்பிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
@block_G@
* மொத்தமுள்ள 423 கல்லுாரிகளில், 180 கல்லுாரிகளில், 90 சதவீத இடங்கள் நிரம்பின.
* 57 கல்லுாரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பின. இவற்றில், 27 அரசு கல்லுாரிகள்.
* 332 கல்லுாரிகளில், 50 சதவீத இடங்கள் நிரம்பின.
* இரு கல்லுாரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடந்துள்ளது.
* ஒரு கல்லுாரியில், மாணவ, மாணவியர் யாரும், 'சீட்' பெற வில்லை.
* மரைன் இன்ஜினியரிங்; 12 பேர், ஜவுளி இன்ஜினியரிங்; 2 பேர், தொழில் மற்றும் நிர்வாகம் ; 3 பேர் தேர்வு செய்து உள்ளனர்.block_G
மேலும்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி
-
செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்