தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று, விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலையை வைத்து, கணபதி ஹோமம் முடித்து சுண்டல், அபிஷேகம், அவல், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படைத்து, பக்தர்களுக்கு வழங்கினர்.

பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று பம்பை, மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து, 50க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று, மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில், விநாயகர் சிலைகளை கரைத்து, பக்தர்கள் நீராடி சென்றனர். அங்கு, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பாரூர் போலீசார், 20க்கும் மேற்பட்டோர் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
*ஓசூர் அருகே, இடையநல்லுாரில், இளைஞர்கள் சார்பில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊஞ்சலில் ஓய்வெடுக்கும் வகையில், விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு சிறப்பு பூஜை செய்து நேற்று மாலை மேள, தாளங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு சென்று நாகொண்டப்பள்ளி ஏரியில் கரைக்கப்பட்டது.

Advertisement