ரூ.87.99 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்



ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 31.40 லட்சம் ரூபாய் மதிப்பில், எஸ்.முதுகானப்பள்ளியில்

புதிய பஞ்., அலுவலகம், ஒட்டர்பாளையம் கிராமத்தில், 11.59 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய், சிமென்ட் களம் அமைக்கும் பணி ஆகியவற்றை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement