குவாரிகளை தற்காலிகமாக மூட ஆர்.டி.ஓ., பரிந்துரை
கம்பம், : காமயகவுண்டன்பட்டியில் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நிர்வகிக்கும் குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகம்மது, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்துள்ளதாக, உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.
காமயகவுண்டன்பட்டியில் குவாரி பிரச்னையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் கம்பம் நகர் செயலாளர் சசிக்குமார் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நேற்று காலை அக்கட்சியினருடன் பேசிய உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன், 'சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி காமயகவுண்டன்பட்டியில் இயங்கி வரும் ஆறு குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, நான் செய்த பரிந்துரையை ஏற்று, ஆர்.டி.ஓ., செய்யது முகமது கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலை நடந்தது முதல் இப்போது வரை குவாரிகள் செயல்படவில்லை. இறந்தவருக்கு நிவாரணம் தர அரசிற்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.', என்றார். தாசில்தாரின் உத்தரவாதத்தை தொடர்ந்து தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் சங்கிலிவேல், மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் சசிக்குமார் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
மேலும்
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி