கோயில் நிலத்தில் 6000 மரக்கன்றுகள் நட முடிவு
தொண்டி : தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் பனை மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடுவதற்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம், மரங்கள் வளரக்கூடிய, நீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மரங்களை நட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கபட்டுள்ளது.
இதன்படி தொண்டியில் உள்ள உந்திபூத்த பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் தொண்டி கோடிவயல் கண்மாய் பகுதியில் 12 ஏக்கர் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் 6000 பனைமரக்கன்றுகளை நட முடிவு செய்யபட்டது. அவ்விடத்தில் பட்டாச்சாரியார் கருணாகரன் தலைமையில் மந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.
மேலும்
-
ஹிமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி; 2 பேர் மாயம்
-
நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்
-
84 நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பெங்களூரு அணி வெளியிட்ட அறிவிப்பு
-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி