விநாயகர் சிலைகள் குளங்களில் விசர்ஜனம் 

கோவை; விநாயகர் சதுர்த்தி விழாவை, இந்து அமைப்புகளுக்கு இணையாக பொது நல அமைப்பினரும் குடியிருப்போர் சங்கத்தினரும், நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

குடியிருப்புகள் நிறைந்த இடங்கள், அபார்ட்மென்ட்கள், வில்லாக்கள் நிறைந்த இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேள தாளங்கள் முழங்க கலாசாரம் மாறாமல், சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாடினர். நேற்று மாலைசிலைகளை, குளங்களில் விசர்ஜனம் செய்தனர்.

தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி குளத்தில் செல்வபுரம் மெய்யப்பன் நகர், சி.எம்.சி.காலனி, லாலி ரோடு, வெங்கிட்டாபுரம் மக்கள்8 அடிகொண்ட மூன்று பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில்வைத்துவழிபட்ட விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

சிங்காநல்லுார் அக்ரஹாரம், காமராஜர் ரோடு, வெள்ளலுார் ரோடுகளில் பிரதிஷ்டை செய்த, 10க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை, சிங்காநல்லுார் குளத்தில் விசர்ஜனம் செய்தனர்.

Advertisement