செப்டம்பர், 2 வரை மழை பெய்யும்

சென்னை: 'வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் செப்டம்பர், 2ம் தேதி வரை மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. திருவள்ளூர், கோவை, நாகை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் செப்., 2 வரை, சில இடங்களில், இடி, மின்னலுடன் மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையும் சற்று குறைவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு; இன்னும் 36,446 இடங்கள் காலி
-
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
அமெரிக்காவுக்கு தபால் சேவையை நிறுத்திய 25 நாடுகள்!
-
காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமனை நியமிக்க முடிவு
-
சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு வரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை