பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வரும் பூம்பாறை

19

சென்னை: கொடைக்கானல் அருகேயுள்ள அழகிய சுற்றுலா பகுதியான பூம்பாறை, பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றி வருவதால், அங்கு தேசிய புலனாய்வு நிறுவனமான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பூம்பாறை என்ற அழகிய கிராமம் உள்ளது. ரம்மியான சூழலில் உள்ள பூம்பாறை கிராமத்தை, தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், தங்களின் புகலிடமாக மாற்றி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், மத மாற்றத்திற்கு எதிராக செயல்பட்ட ராமலிங்கத்தை கொலை செய்ய, பூம்பாறையில் தான் பயங்கரவாதிகள், 2019ல் திட்டம் தீட்டி உள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், பி.எப்.ஐ., முன்னாள் நிர்வாகிகளான சாகுல் ஹமீது, நபீல்ஹாசன் உள்ளிட்ட ஐந்து பேரும் இங்கு தான் பதுங்கி உள்ளனர்.

இவர்களுக்கு கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில், பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாத்துல்லா,35, அடைக்கலம் கொடுத்துள்ளார்.

இவர், இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பூம்பாறையில் உள்ள சில நபர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முகமது யாசின் மற்றும் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த அப்துல்லா ஆகியோரும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement