முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்  

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, சூர்யா மேலாண்மை கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.

கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார்.

முன்னதாக கல்லுாரி முதல்வர் பாலாஜி வரவேற்றார். கல்லுாரி முன்னாள் மாணவர் ரபீக் நுார்பாஷா கலந்து கொண்டு மேலாண்மை படிப்பில் மாணவர்கள் சாதனைகள் குறித்து பேசினார்.

சூர்யா கல்வி குழும கல்லுாரி முதல்வர்கள் சங்கர், அன்பழகன், வெங்கடேஷ், பாலாஜி, துணை முதல்வர்கள் ஜெகன், மோகன், சிகா பள்ளி முதல்வர் கோபால், உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டாம் ஆண்டு மாணவர் முகமது தவ்பிக் நன்றி கூறினார்.

Advertisement