அமெரிக்க விசாவில் அர்ஜென்டினா போகலாம்

பியூனஸ் அர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்கு சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக செல்வோர், தனியாக விசா பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்நிலையில், விசா விதியில் அர்ஜென்டினா மாற்றம் செய்துள்ளது.

இது குறித்து அர்ஜென்டினா துாதர் மரியானோ காசினோ கூறியுள்ளதாவது:

இந்திய சுற்றுலா பயணியருக்கான விசா விதிகளை தளர்த்தியுள்ளோம். அமெரிக்காவுக்கான செல்லுபடியாகும் விசா வைத்துள்ள இந்தியர்கள், அர்ஜென்டினா விசாவுக்கென தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அமெரிக்க விசா மூலமாகவே, அர்ஜென்டினாவுக்குள் தாராளமாக வரலாம்.

எங்களின் நாட்டிற்கு அதிகமான இந்திய சுற்றுலா பயணியரை வரவேற்பதில் நாங்கள் தயாராக இருக்கிறோம். இது, இரு நாடுகளிடையே கலாசாரம் மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement