ஜப்பானில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

3


டோக்கியோ: இரண்டு நாள் பயணமாக ஜப்பானுக்கு பிரதமர் மோடி சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
ஜப்பானில் நடக்கும் 15வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.



ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஆகஸ்ட் 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு சீனா, ரஷ்யா அதிபர்களை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.
பேச்சுவார்த்தை


இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டோக்கியோவில் தரையிறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில், இந்தப் பயணத்தின் போது பிரதமர் இஷிபா மற்றும் பிறருடன் தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர்நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement