ரத்ததான முகாம்

செஞ்சி: ஆலம்பூண்டி, ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி முகாமை துவக்கிவைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா முன்னிலை வகித்தார். கல்லுாரி டீன் மணிகண்டன் வரவேற்றார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி டாக்டர் விஜயா தலைமையிலான குழுவினர் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நர்சிங் கல்லுாரி முதல்வர் உதயசங்கரி, பொறியியல் கல்லுாரி முதல்வர் பாவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட நர்சிங், பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.

Advertisement