மகளிர் பீச் வாலிபால் போட்டி லயோலா அணி முதலிடம்

சென்னை, சென்னை மண்டல அளவில், கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பீச் வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி மகளிர் அணி முதல் இடம் பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் சார்பில், மண்டல அளவில் கல்லுாரி மாணவியருக்கு, 'முதல்வர் கோப்பை' பீச் வாலிபால் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மூன்று நாட்களாக நடந்தது.

இதில், சென்னை மண்டல அளவில், 10க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தது. இதில், சென்னை லயோலா மகளிர் அணி, அனைத்து போட்டியிலும் வெற்றிப்பெற்று தங்கப் பதக்கம் வென்றது.

அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் வெல்ஸ் கல்லுாரி அணி வெள்ளி, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை அணி வெண்கலம் வென்றது.

முதல் இடம் பிடித்த லயோலா அணி அடுத்து நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Advertisement