உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செஞ்சி: செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம், கெங்கவரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கணக்கன்குப்பத்தில் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.

ஒன்றிய கவுன்சிலர் சத்தியா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சுலோச்சனா ஜெயபால் வரவேற்றார்.

இதில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கினர்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோகப்பரியா, ஒன்றிய செயலாளர் விஜயராகவன், ஏ.பி.டி.ஓ.,க்கள் ஏழுமலை, சுரேஷ்கு மார், அபிராமி, சுந்தரபாண்டியன், ஊராட்சி தலைவர் தாட்சாயணி, ஒன்றிய அவைத்தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யா துரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement