சங்கர் ஜிவாலுக்கு புதுப்பதவி: தீ ஆணையத் தலைவராக நியமனம்

சென்னை : இன்றுடன் ஓய்வு பெறும் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலை , தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், வரும், இன்றும் தேதி ஓய்வு பெறுகிறார். இவருடன், தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் டிஜிபி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார். இவர்களுக்கான பிரிவு உபசார விழா விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில், சங்கர் ஜிவாலை, தீ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்து உள்ளார். 2023 ஜூன் 30 ல் டிஜிபி ஆக பதவியேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் 2017 மற்றும் 2019ம் ஆண்டு ஜனாதிபதி பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வரிடம் வாழ்த்து
தீ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@twitter@https://x.com/CMOTamilnadu/status/1961383011250774313twitter







