ஓட்டுப்பதிவு இயந்திரம் வருகை

மதுரை : மதுரை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் 1300 ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வந்து இறங்கின.

பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து வந்த அவை மதுரை காந்திமியூசியம் அருகே உள்ள கோடவுனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அந்த இயந்திரங்களுடன் ஆயிரம் வி.வி.பாட் எனும் ஓட்டளிப்பதை தெரியப்படுத்தும் இயந்திரங்களும் வந்திறங்கின.

அவற்றை கலெக்டர் பிரவீன்குமார், நேர்முக தேர்தல் உதவியாளர் ரங்கநாதன், தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

'அடுத்தாண்டு தேர்தல் வர உள்ள நிலையில் இப்போதே முக்கிய மையங்களில் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன' என தெரிவித்தனர்.

Advertisement