மூன்றாவது சுற்றில் ஸ்வியாடெக்: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு போலந்தின் ஸ்வியாடெக், இத்தாலியின் சின்னர், அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், நெதர்லாந்தின் சுஜான் லேமன்ஸ் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், குரோஷியாவின் டோனா வேகிக் மோதினர். இதில் கோகோ காப் 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-1 என அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட்டை தோற்கடித்து 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, செக்குடியரசின் கரோலினா முசோவா, பிரேசிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மையா, ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் மோதினர். அபாரமாக ஆடிய சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 6-4, 6-4 என பிரிட்டனின் ஜேக்கப் பியர்ன்லியை தோற்கடித்தார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் டாமி பால், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, ரஷ்யாவின் ஆன்ட்ரி ரப்லெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் அகர்-அலியாசிம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
மேலும்
-
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; சீனாவை வென்று சாதித்தது இந்தியா!
-
மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்
-
கணிப்புகளை பொய்யாக்கி 7.6 % வளர்ச்சி பெற்ற இந்திய ஜிடிபி
-
நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்
-
இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
-
உலக பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்