மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்

1

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மின்சாரம் தடைபட்டதால், மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதிருப்தி அடைந்த அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி கவுன்சில் கூட்டம், மேயர் சரவணன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மாலை 4:10 மணிக்கு மேயர் வந்த உடன் கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மின்தடை ஏற்பட்டது.

ஜெனரேட்டரும் பழுதாகி இருந்தது. இதனால், அரங்கின் நுழைவு வாயில் கதவுகள் திறந்து வைக்கப்பட்டு கவுன்சிலர்கள் பேச துவங்கினர். ஆனாலும், போதிய வெளிச்சம் இல்லாததால், மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தங்களின் மொபைல் போனில் உள்ள டார்ச் வெளிச்சில் கூட்டம் நடத்தப்பட்டது.

அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதிலெட்சுமி, மின்தடை ஏற்பட்டால் எப்படி எடுத்துக்கொள்ளுவது என கூறி ஆத்திரத்தமாக கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.


தொடர்ந்து, ஒரு சில கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். பிறகு, போதிய வெளிச்சம் இல்லாத சூழலில், 4:45 மணிக்கு, 37 தீர்மானங்களுக்கும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, மேயர் சரவணன் கூட்டத்தை நிறைவு செய்தார்.


இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: புதிதாக கட்டப்படும் அலுவலகத்தில், கூட்ட அரங்கத்தில் ரூ.1 கோடி அளவுக்கு பணி நடக்க வேண்டி உள்ளது. போதிய நிதி இல்லாததால் பணிகள் நடக்கவில்லை. இதனால் தான் பழைய அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement