கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு: பிரதமர், தாயார் குறித்து அவதூறு பேச்சுக்கு ஒவைசி கண்டிப்பு

16

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து காங்கிரஸ் பேரணியில் அவதூறாக பேசியதற்கு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு என கண்டித்தார்.


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலானது. அவதூறாக பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:


எதிர்க்கலாம், விமர்சிக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம். ஆனால் நீங்கள் கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு. விவாதம் கொச்சையாக மாறும். பிரதமரை விமர்சிக்கலாம், ஆனால் அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டாம். கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். கண்ணியத்தின் எல்லையை மீறினால் அது தவறு, அதைச் செய்யக்கூடாது. இதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு ஓவைசி கூறியுள்ளார்.

நடந்தது என்ன?




பீஹாரில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வருகிறார்.
தர்பங்காவில் யாத்திரையின் போது, சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அதில் ராகுல், பிரியங்கா மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் போஸ்டர்கள் மேடையில் காணப்பட்டன. இந்த அவதூறு பேச்சுக்கு எதிராக பாட்னாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பாஜ புகார் அளித்ததுடன், காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement