ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி வெற்றி

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 4-3 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, இந்தியா, மலேசியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் கஜகஸ்தான், சீனா, ஜப்பான் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 'ஹாட்ரிக்' கோல் (20, 33, 47வது) அடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜக்ராஜ் சிங் (18வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணி, தனது 2வது போட்டியில் (ஆக. 31) ஜப்பானை சந்திக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; சீனாவை வென்று சாதித்தது இந்தியா!
-
மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்
-
கணிப்புகளை பொய்யாக்கி 7.6 % வளர்ச்சி பெற்ற இந்திய ஜிடிபி
-
நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்
-
இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
-
உலக பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
Advertisement
Advertisement