ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

டோக்கியோ: ''ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கையெழுத்து
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி , ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபா இல்லத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜப்பான் இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கியமான விஷயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில், இரு நாட்டு உயர் அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர். இதன பின்னர் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வலு
இதன் பிறகு பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய எங்களின் கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமானதாகவும், நோக்கம் உள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய ஜனநாயகம் மற்றும் உயிருள்ள ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்களின் கூட்டாண்மை இரு நாடுகளுக்கு மட்டும் அல்ல உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உலக அமைதி பாதுகாப்புக்கு இந்தியா ஜப்பான் இணைந்து செயல்படும். ஜப்பானுடனான பொருளாதார உறவ வலுவாக உள்ளது








அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பானின் 6 லட்சம் கோடி முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு ,நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்தியா - ஜப்பான் வணிக கூட்டமைப்பிலும், ஜப்பானிய நிறுவனங்களிடம் நான், ' இந்தியாவில் தயாரியுங்கள். உலகத்துக்காக தயாரியுங்கள்,' எனக்கூறியுள்ளேன்.
முக்கிய திட்டம்
உயர் தொழில்நுட்ப துறையில், ஒத்துழைப்புக்கே எங்களுக்கு முக்கியமான இலக்கு. இதில், டிஜிட்டல் ஒத்துழைப்பு 2.0, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு திட்டங்கள் ஆகியன எடுத்துக் கொள்ளப்பட ள்ளன. செமி கண்டக்டர் மற்றும் அரிய வகை தாது வளங்கள் ஆகியன எங்களின் முக்கிய திட்டங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும்
-
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; சீனாவை வென்று சாதித்தது இந்தியா!
-
மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த கும்பகோணம் மாநகராட்சி கூட்டம்
-
கணிப்புகளை பொய்யாக்கி 7.6 % வளர்ச்சி பெற்ற இந்திய ஜிடிபி
-
நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; ஸ்ரீநகரில் 205 பயணிகளுடன் அவசர தரையிறக்கம்
-
இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து
-
உலக பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்