விநாயகர் சிலைகள் விஜர்சனம் : நாளை போக்குவரத்து மாற்றம் புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடைபெறுவதையொட்டி, நகரப் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங் செய்திக்குறிப்பு:
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி முழுதும் பல இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை 31ம் தேதி மதியம், ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் விஜர்சனம் செய்யப்படவுள்ளது.
ஊர்வலம், நாளை மதியம் 12:00 மணிக்கு, சாரம் அவ்வை திடலில் இருந்து துவங்குகிறது. அதனையொட்டி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக நகரப் பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காலாப்பட்டு மார்க்கத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் டவுன் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து சிவாஜி சிலை நோக்கி சென்று, கொக்கு பார்க், ராஜிவ், இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
அதேபோல், பஸ் நிலையத்தில் இருந்து புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் வலது பக்கம் திரும்பி மறைமலையடிகள் சாலை வழியாக இந்திரா, ராஜிவ் சதுக்கம் வழியாக காலாப்பட்டு செல்ல வேண்டும்.
காமராஜ் சாலையில் லெனின் வீதியிலிருந்து ராஜா தியேட்டர் வரை மதியம் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலமானது நேருவீதியை கடக்கும் வரை அண்ணா சாலையில் மதியம் 3:00 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்படும்.
விநாயர் சிலை ஊர்வலத்தின் போது நேரு வீதி, காந்தி வீதி மற்றும் எஸ்.வி.பட்டேல் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
சாரம் அவ்வை திடலில், முத்தியால்பேட்டை மற்றும் நெல்லித்தொப்பு மார்க்கங்களில் இருந்து ஊர்வலமாக வரும் விநாயகர் சிலைகள், ராஜா தியேட்டர் சந்திப்பை வந்தடைய வேண்டும். அங்கிருந்து அனைத்து சிலைகளும், ஒரே ஊர்வலமாக நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் அடைந்து, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு செல்லும்.
ஆகையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட சாலைகளை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது குரில் தீவுகள்; ரிக்டரில் 5.2 அலகாக பதிவு
-
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: 55% பேர் திருப்தி; கருத்துக்கணிப்பில் தகவல்
-
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு
-
திருச்செந்துார் கோவிலில் புரோக்கர்கள் வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு