கைவினை பொருட்கள் கண்காட்சி

புதுச்சேரி : தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் மற்றும் வளர்ச்சி கழகத்தின், பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில், கைவினை கண்காட்சி மற்றும் விற்பனை புதுச்சேரி பாரதி பூங்கா அருகில் உள்ள வர்த்தக சபையில் நேற்று துவங்கியது.

கண்காட்சி வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியினை புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கண்காட்சியில் 15க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் கைவினை படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் பித்தளை விளக்குகள் மற்றும் கைவினைப் பரிசுப் பொருட்கள், குழந்தைகள் விளையாடும் மர பொம்மைகள், பஞ்ஜலோகத்தில் செய்யப்பட்ட சிலைகள், பித்தளை சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட மரச்சிற்பங்கள் மற்றும் கலை பொருட்கள், பெண்கள் பயன்படுத்தும் பைகள், பூஜை வகைகள், அகர்வத்தி மாலைகள், செம்பு பொருட்கள், பேப்பர் கூழினால் செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள், புடைவைகள், நகைகள், கோவில் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் பொருளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி விற்பனை நடக்கிறது.

Advertisement