ரூ.32 கோடி மதிப்பு நிலத்தை அரசுக்கு தானம் வழங்கிய பெண்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், இணைப்பு திட்ட சாலை அமைப்பதற்காக, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 சென்ட் நிலத்தை, நகராட்சி நிர்வாகத்திடம் சாந்தா என்ற பெண் தானமாக வழங்கினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், 1968ம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் எண், 5ல், பொள்ளாச்சி - பல்லடம் ரோடு - சின்னாம்பாளையம் ரோட்டை இணைக்கும், 66அடி இணைப்புச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதை கடந்த, 2009ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்பின், நிலம் கையகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன், சாந்தாவிடம் பேச்சு நடத்தி இணைப்புச் சாலைக்காக நிலம் வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, 80 சென்ட் நிலத்தை தானமாக வழங் க சாந்தா முடிவு செய்தார். நேற்று, நகராட்சி கமிஷனர் கணேசன், நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் ஆகியோரிடம் நிலத்தை தானமாக வழங்கினார். இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 32 கோடி ரூபாயாகும்.
இது குறித்து சாந்தா கூறியதாவது: பல்லடம் ரோட்டில், கணவரின் பூர்விக சொத்து உள்ள இடத்தில் மண்டபம் கட்டப்பட்டது. அங்கு ரோடு அமைக்க, நகராட்சி நிர்வாகம் கடந்த, 2019ம் ஆண்டு நிலம் கேட்டது. விருப்பம் இல்லை எனக்கூறினோம். இதனால், எங்களது சொத்து வரியை உயர்த்தியது.
இதை எதிர்த்து கணவர் ஜெயராம் வழக்கு தொடர்ந்தார். நகராட்சிக்கும் எங்களுக்கும் மோதல் போக்காக இருந்தது. இச்சூழலில், கமிஷனர் கணேசன் சமரசமாக பேசி, 49 லட்சம் வரி செலுத்த உத்தரவிட்டார். அவரது செயலால் மனநிறைவு ஏற்பட்டு, 32 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்தேன்.
இது குறித்து, எனது மகன், மகளிடம் கலந்தாலோசித்து, எனது 40 சென்ட், மகன், மகளின் தலா, 20 சென்ட் என மொத்தம், 80 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தற்போது, அந்த வழக்குகளை வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு, சாந்தா கூறினார்.
பிரச்னைக்கு தீர்வு நகராட்சி தலைவர் சியாமளா கூறுகையில், ''பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் இருந்து, பல்லடம் ரோடு வழியாக சின்னாம்பாளையத்துக்கு செல்லும், 66 அடி இணைப்பு திட்ட சாலை தடைபட்டுள்ளது. கடந்த, 16 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
சாந்தா ஜெயராம், தற்போது, இடம் தானமாக வழங்கியதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இடம் பெற்று கொடுத்த நகராட்சி கமிஷனர் மற்றும் இடம் தானமாக வழங்கியவருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன்,'' என்றார்.










மேலும்
-
நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்
-
தமிழகத்துக்கு நடந்த துரோகம்; மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேச்சு
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது குரில் தீவுகள்; ரிக்டரில் 5.2 அலகாக பதிவு
-
பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: 55% பேர் திருப்தி; கருத்துக்கணிப்பில் தகவல்
-
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு
-
திருச்செந்துார் கோவிலில் புரோக்கர்கள் வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு