செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கல்

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி புரிந்து வரும் 10 உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கான பணி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement