விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; ஒரு சிலைக்கு 500 போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல், குடைப்பாறைப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை, 500 போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோட்டைக்குளத்தில் கரைக்கப்பட்டது.
திண்டுக்கல், குடைப்பாறைப்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை, மேளதாளங்கள் முழங்க மதுரை ரோடு வழியாக எடுத்து வரப்பட்டு, கோட்டைக்குளத்தில் கரைக்கப்படுவது வழக்கம்.
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊர்வலத்தின்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, பதற்றமான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு அங்கு, 5 அடி உயர விநாயகர் சிலை விசர்ஜனத்துக்காக நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஹிந்து முன்னணியினர், பிற ஹிந்து அமைப்புகள், குடைப்பாறைப்பட்டி பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.பி., பிரதீப் நேரடி கண்காணிப்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் இருந்தன.
காளியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட ஊர்வலம், வத்தலக்குண்டு ரோடு வழியாக, மதுரை ரோடு ஜங்ஷன் வந்தடைந்தது. அங்கு, மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் அருகே மேளம் அடிப்பது நிறுத்தப்பட்டது. போலீஸ் கயிறு கட்டி பாதுகாப்பு வளையம் உருவாக்கினர்.
ஊர்வலம் யானை தெப்பம் பகுதிக்கு வந்ததும் மீண்டும் மேளதாளங்கள் முழங்க தொடர்ந்தது. கோட்டைக்குளத்தில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிலை கரைக்கப்பட்டது.
மேலும்
-
ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்
-
ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் பயணி ரயில் பயணம்: பறிமுதல் செய்தது ரயில்வே பாதுகாப்பு படை
-
ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை: சீமான்
-
முதலீடுகளை ஈர்க்கவா, முதலீடுகள் செய்யவா: ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
-
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை
-
சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு