பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: 55% பேர் திருப்தி; கருத்துக்கணிப்பில் தகவல்

1

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சரியான பதிலடியாக அமைந்துள்ளது. 55 சதவீதம் பேர் திருப்திகரமாக உள்ளது என்றும், 15 சதவீதம் பேர் போதுமானதாக இல்லை என்றும் கூறியதாக கருத்துக்கணிப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவம், பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.


இந்த நிலையில், ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து, இண்டியா டுடே மற்றும் சி வோட்டர் மூட் இணைந்து, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆக., 14ம் தேதி வரையில் தேசிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 2,06,826 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன.



பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி மிகவும் வலுவானது, பதிலடி போதுமானது என 55 சதவீதம் கருத்து தெரிவித்தனர். அதேபோல், பதில் அளித்தவர்களில் 15 சதவீதம் பேர் பதில் போதுமானதாக இல்லை என்றும், பாகிஸ்தானை தண்டிக்க இன்னும் பலவற்றை செய்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். அதேநேரத்தில் 21 சதவீதம் பேர் பலவீனமாது என்று நினைக்கின்றனர் என்பது கருத்து கணிப்பு வாயிலாக தெரியவந்துள்ளது.

Advertisement