நிலநடுக்கத்தால் குலுங்கியது குரில் தீவுகள்; ரிக்டரில் 5.2 அலகாக பதிவு

குரில்: குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ரஷ்யா, ஜப்பான் நாடுகள் இடையே அமைந்துள்ளது குரில் தீவுகள். இந்த தீவின் வடக்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதை யஷ்னோ சகலிங்ஸ் நில அதிர்வு நிலைய தலைவர் எலெனா செமேனோவா அறிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பசிபிக் பெருங்கடலில் 5.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதிர்வின் மையப்புள்ளி பரமுஷிர் தீவில் உள்ள செவரோ குரில்ஸ்க் நகரின் கிழக்கே 94 கிமீ தொலையில் இருந்தது.
நில அதிர்வுகளை மக்களால் உணர முடிந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம்
-
ரூ.25 லட்சம் ரொக்கத்துடன் பயணி ரயில் பயணம்: பறிமுதல் செய்தது ரயில்வே பாதுகாப்பு படை
-
ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை: சீமான்
-
முதலீடுகளை ஈர்க்கவா, முதலீடுகள் செய்யவா: ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
-
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை
-
சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement