அப்பாவி மக்கள் மீது அதிகார துஷ்பிரயோகமா?

ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஸ்ரீரங்கம் வருகையை முன்னிட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், பக்தர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட காட்சி மனவேதனையை அளிக்கிறது. காவல் துறை அதிகாரிகள், ஹிந்துக்களிடம் தான், தங்களின் வீரத்தை காட்டுகின்றனர்.

அரசியல் செல்வாக்கு உடையோர், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் போலீசை மிரட்டும்போது பொறுமையாக உள்ளனர். இத்தகைய போக்கு, காவல்துறையின் மனநிலை பாதிப்பாக கருத இடமிருக்கிறது.

கோவில் திருவிழாவில் ஊர்வலங்களில் மக்களிடம் அனுசரணையாக நடந்து, ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறை, கெடுபிடி காட்டுகிறது.

அதுவே, பிற மத விழாக்களில், கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டி சத்தமாக ஒலி எழுப்பி, அனுமதி இல்லாமல், ஊர்வலமாக வருவோரிடம், எந்த சட்டத்தைக் குறித்தும் காவல்துறை பேசுவதில்லை. இப்படி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில தலைவர், ஹிந்து முன்னணி

Advertisement